×

பெண்ணிடம் ரூ.14.87 லட்சம் திருடிய மோசடி கும்பல்

சென்னை : சென்னை பெரும்பாக்கத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.14.87 லட்சம் திருடு போயுள்ளது. பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய
மர்மநபர் ரூ.2000 செலுத்த சொல்லி உள்ளார். ரூ.2,000 செலுத்திய பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து மொத்தம் 8 தவணையாக ரூ.14.87 லட்சத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் பெரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண்ணிடம் ரூ.14.87 லட்சம் திருடிய மோசடி கும்பல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Perumbakkam, Chennai ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்